இரு தடுப்பூசிகளையும் செலுத்தியவர்களுக்கும் டெல்டா திரிபால் ஏற்படவுள்ள ஆபத்து!
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் அதி வீரியம் மிக்க பரவல் தன்மையுடைய டெல்டா வைரஸ் திரிபானது, இரு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டவர்களுக்கும் தொற்றக்கூடிய தன்மை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
டெல்டா திரிபு நோய் எதிர்ப்பு கட்டமைப்பை கடந்து செல்லக்கூடிய ஆற்றல் உள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி உயிரியல் துறை பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரபல சஞ்சிகை வெளியிட்டுள்ள ஆய்வு முடிவொன்றில் டெல்டா திரிபானது முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களுக்கும் தொற்றக்கூடிய நிலை உள்ளதாக, சர்வதேச விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் டெல்டா திரிபானது, மனிதர்களின் நோய் எதிர்ப்பு கட்டமைப்பையும் கடந்து செல்லக்கூடியது
என அந்த ஆய்வறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியே பேராசிரியர் சந்திம ஜீவந்தர மேற்படி தெரிவித்துள்ளார்.