கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான திகதி அறிவிப்பு!
vaccine
corona
sri lanka
pregnant
By Shalini
அடுத்த புதன்கிழமை முதல் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று மகப்பேற்று மருத்துவ மற்றும் நரம்பியல் விஷேட வைத்திய நிபுணர்களின் விஞ்ஞான பீடத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரதீப் டி சில்வா தெரிவித்தார்.
தற்போது இலங்கையில் சுமார் 275,000 கர்ப்பிணித் தாய்மார்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, ஆபத்தில் இருக்கும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதன் ஆரம்ப நிகழ்ச்சி 9 ஆம் திகதி காலை 11 மணிக்கு சுகாதார அலுவலகத்தின் பிலியந்தல மருத்துவ அலுவலகத்திலும், கொழும்பு கோட்டை பெண்கள் மருத்துவமனையிலும் நடைபெறும் என்றும் குறிப்பிட்டார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்