வட்டுக்கோட்டை - அராலி பகுதியில் கோர விபத்து! சாரதிக்கு ஏற்பட்ட நிலை
Police
Accident
Jaffna
Vaddukoddai
Araly
By Chanakyan
வட்டுக்கோட்டை - அராலி பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில், நீண்ட போராட்டத்தின் பின் சாரதி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டைக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட அராலி தெற்கு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் நின்ற மரத்துடன் மோதுண்ட நிலையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையிலும் மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.