'வட்டுக்கோட்டை இளைஞனின் சித்திரவதை மரணம்' ஆட்கொலை என முடிவு
சிறிலங்கா காவல்துறையினரால் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டதால், வட்டுகோட்டை இளைஞர் நாகராசா அலெக்ஸ் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேக நபர்களான காவல்துறையினரை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
திருட்டுச் சம்பவம் தொடர்பாக கைதான குறித்த இளைஞரின் உயிரிழப்பு, உயிரை போக்குதல் அல்லது ஆட்கொலை என்பதன் அடிப்படையில் இந்தக் கைது உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளதாக மூத்த சட்டத்தரணி என்.சிறீகாந்தா நேற்று(24)தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணை
இந்த மரணம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை தமக்கு ஏற்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
நேற்றைய நடவடிக்கையில் யாழ்ப்பாணம், வவுனியா எனப் பல இடங்களில் இருந்தும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் கலந்துகொண்டனர்.
வழக்கு விசாரணை தொடர்ந்து விரைவாக இடம்பெற ஏதுவாக எதிர்வரும் திங்கட்கிழமைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.