இராஜாங்க அமைச்சராக பொறுப்பேற்றார் வடிவேல் சுரேஷ்
SJB
Ranil Wickremesinghe
Sri Lankan political crisis
Vadivel Suresh
By Thulsi
நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் (Vadivel Suresh) தொழில் இராஜாங்க அமைச்சராக உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பித்துள்ளார்.
குறித்த நிகழ்வானது இன்றைய தினம் (22) இடம்பெற்றுள்ளது.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவுக்கும் (Ali Zahir Moulana) அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுப் பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
பதவிப்பிரமாணம்
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (21) பிற்பகல் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) முன்னிலையில் அவர்கள் இருவரும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

மேலும், வடிவேல் சுரேஷ் பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குள் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |