பதவி நீக்கப்பட்ட வடிவேல் சுரேஷ் : வரவு செலவு திட்ட வாக்கெடுப்பை தொடர்ந்து நகர்வு!
பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தால் குறித்த தீர்மானம்“ மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய பசறை அமைப்பாளராக லட்சுமணன் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பசறை அமைப்பாளர்
புதிய பசறை அமைப்பாளராக நியமிக்கப்பட்ட லட்சுமணன் சஞ்சய், கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து அவருக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தாம் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக லட்சுமணன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இளைஞர்களுக்காக பணியாற்ற தாம் ஆவலுடன் இருப்பதாகவும் எதிர்காலத்தில் இளைஞர்கள் அரசியலில் முக்கிய இடத்தை வகிப்பார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்