வேட்பு மனு தாக்கல் செய்த வடிவேல் சுரேஸ்
ஐக்கிய ஜனநாயக குரல் சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் (Vadivel Suresh) தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
பதுளை மாவட்ட செயலகத்தில் இன்று காலை அவர் வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
நேற்றையதினம் (9) கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake) தலைமையில் புதிய கட்சியாக ஐக்கிய ஜனநாயக குரல் என்ற கட்சி அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது.
ஐக்கிய ஜனநாயக குரல்
இக் கட்சியின் ஒலிவாங்கி சின்னம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இன்று காலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நவம்பர் 14 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல்கள் இடம்பெற்று வருகின்றது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை( 11) நண்பகலுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |