வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு - வெளியானது முழுவிபரம்!

Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka
By Kalaimathy Feb 03, 2023 12:55 PM GMT
Report

யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமார் 108 ஏக்கர் காணி 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

பலாலி - அந்தனிபுரத்தில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்வில் காணி விடுவிப்புக்கான உத்தரவு பத்திரத்தினை யாழ்.மாவட்ட இராணுவ தளபதி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதோட்ட யாழ்.மாவட்டச் செயலர் அம்பலவாணனர் சிவபாலசுந்தரனிடம் கையளித்துள்ளார்.

கிராம சேவகர் பிரிவுகள்

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு - வெளியானது முழுவிபரம்! | Vali North High Security Zone Land Palaly

காங்கேசன்துறை - மத்தி (ஜே 234) - 50.59 ஏக்கர், மயிலிட்டி - வடக்கு (ஜே 246) - 16.55 ஏக்கர், தென்மயிலை (ஜே 240) - 0.72 ஏக்கர்,  பலாலி - வடக்கு (ஜே 254) - 13.033 ஏக்கர்,  நகுலேஷ்வரம் (ஜே 226) -28 ஏக்கர்  மேற்படி கிராம சேவகர் பிரிவுகளில் மொத்தமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 80 ஏக்கர் காணியும், கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்த 28 ஏக்கர் காணியுமாக 108 ஏக்கர் காணி மிக நீண்ட காலத்தின் பின்னர் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீள்குடியேற்றத்திற்காக 130 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளன. மேலும் இன்று விடுவிக்கப்பட்டுள்ள 108 ஏக்கர் காணியில் 13 ஏக்கர் அரச காணியாகும் இந்த காணி யாழ்.வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து 5 இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருக்கும் 75 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

டக்ளஸ் தலைமையில்

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு - வெளியானது முழுவிபரம்! | Vali North High Security Zone Land Palaly

மொத்தமாக 205 குடும்பங்கள் பயன்பெறவுள்ளன. மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க சிறிலங்கா அதிபர் பணித்துள்ளார். இன்றைய நிகழ்வில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், அங்கஜன் இராமநாதன், மற்றும் வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மற்றும் அதிபரின் செயலாளர் இ.இளங்கோவன், பிரதம செயலாளர், யாழ்.மாவட்டச் செயலர், யாழ்.மாவட்ட உதவி அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), தெல்லிப்பழை பிரதேச செயலர் மற்றும் பொதுமக்கள், படையிர், காவல்துறையினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024