டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி சிறிதளவு வீழ்ச்சி
நேற்றுடன் (23.09.2026) ஒப்பிடுகையில், இன்று (24) அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி வர்த்தக வங்கிகளில் சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, NDB, மக்கள், கொமர்ஷல் மற்றும் சம்பத் வங்கிகளில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் அதிகரித்துள்ளன.
செலான் வங்கியில் டொலரின் கொள்வனவு விலை 325.65 ரூபாயாகவும், விற்பனை விலை 334.90 ரூபாயாகவும் மாற்றமின்றி காணப்படுகிறது.
டொலரின் கொள்வனவு விலை
NDB வங்கியில் கொள்வனவு விலை 325.25 ரூபாயாகவும், விற்பனை விலை 334.25 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

மக்கள் வங்கியில் கொள்வனவு விலை 325.93 ரூபாயாகவும், விற்பனை விலை 334.01 ரூபாயாகவும் உள்ளது.
கொமர்ஷல் வங்கியில் கொள்வனவு விலை 323.60 ரூபாயாகவும், விற்பனை விலை 333.50 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 327 ரூபாயாகவும், விற்பனை விலை 335 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |