ரஷ்யாவிற்கு விழுந்துள்ள அடுத்த அடி: வேம்பயர் தாக்குதலை நடத்தியுள்ள உக்ரைன்
ரஷ்யா (Russia) மீது இரண்டாவது ஊடுருவலை ஆரம்பித்துள்ள உக்ரைன் (Ukraine) ரஷ்யாவின் பெல்கோரோட் (Belgorod) பகுதியில் Vampire ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த தாக்குதல் கடந்த 30 திகதி இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இதில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன் குறைந்தது 46 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஓகஸ்ட் 6ம் திகதி அதிரடியாக ஊடுருவிய உக்ரைன் படைகள், பல கிராமங்களை கைப்பற்றியுள்ளது.
இரண்டாவது ஊடுருவல்
தற்போது இரண்டாவது முறையாக பெல்கோரோட் பகுதியை உக்ரைன் படைகள் நோட்டமிட்டுள்ள நிலையில் குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த தாக்குதலின் போது, பிரதான சாலையில் வாகனங்கள் தாக்குதலுக்கு உள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் திடீர் தாக்குதலால் ஸ்தம்பித்துப் போன மக்கள் வாகனங்களில் தப்பிக்க முயன்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏவுகணை தாக்குதல்
குடியிருப்புகள் பல ஏவுகணை தாக்குதலில் சிக்கி தீக்கிரையாகியுள்ளதுடன் பெல்கோரோட் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்ற நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.
இதனிடையே, பெல்கோரோட் பகுதி ஆளுநர் Gladkov சமூக ஊடகத்தில் பதிவிடுகையில், பெல்கோரோட் பிராந்தியம் மொத்தம் ஏவுகணை அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ளது.
மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார். பெல்கோரோட் பிராந்தியத்தில் உள்ள Krasnoyaruzhsky மாவட்டத்தில் இருந்து 11,000 மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெல்கோரோட் பகுதியானது கடந்த டிசம்பர் மாதமும் உக்ரைன் படைகளின் தாக்குதலுக்கு இலக்கானமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |