ஐம்பது அடி பள்ளத்தில் வீழ்ந்தது வான்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Sumithiran
ஹட்டனிலிருந்து லிதுலை நோக்கி பயணித்த வான் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாறைக்கு மேல் விழுந்ததில் வானின் சாரதியும் உரிமையாளரும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் லிதுல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
பழுது பார்த்த பின்னர்

ஹட்டன் டிக்கோயா நகரில் உள்ள வாகனம் திருத்தும் நிலையம் ஒன்றில் வான் பழுதுபார்த்த பின்னர் கொண்டு செல்லும் வழியில் வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் லிதுலை காவல்துறை போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.