கனடாவில் வசித்துவந்த ஈழத்தின் பிரபல பாடகர் வர்ண ராமேஸ்வரன் காலமானார்!!
By Independent Writer
'தாயகக்கனவுடன்' என்ற மாவீரர் துயிலுமில்லப்பாடல் உட்பட, பல விடுதலைப்பாடல்களை பாடிய விடுதலைக் கலைஞர், இசைக் கலை மாமணி திரு வர்ணராமேஸ்வரன் அவர்களின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2017 ஏப்ரலில் லன்டன் 'வெம்லி அரீனாவில்' IBC-தமிழ் நடாத்திய 'IBC தமிழா 2017' நிகழ்ச்சியில் சிறப்பு நடுவராக கலந்துகொண்டு சிறப்பித்தவர் திரு. வர்ணராமேஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது.
கனத்த இதயத்துடன் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றது IBC தமிழ் குழுமம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்