யாழில் புதிதாக அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையம்! நேரில் சென்றார் சவேந்திர சில்வா
srilanka
vasavilan
shavendrasilva
By Vasanth
யாழ்ப்பாணம் - வசாவிளானில் அவசர தேவைக்காக இராணுவத்தால் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் மையத்தை கோவிட் -19 வெடிப்பைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் ராணுவத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆய்வு செய்தார்.
சுமார் 1000 நபர்கள், தனிமைப்படுத்தலுக்காகவோ அல்லது பராமரிப்புக்காகவோ இந்த நிலையத்தை அவசர காலங்களில் பயன்படுத்தலாம் .
இந்த திட்டத்தைப் பற்றி 521 படையணியின் தளபதி கேர்னல் மகேன் சல்வதுரவிடமிருந்து ஒரு முழுமையான கண்ணோட்டத்தை ஷவேந்திர சில்வா பெற்றார்.
மேலும் எதிர்காலத்தில் அவசரகால தேவை ஏற்பட்டால் இதற்கான செயல்பாட்டு முறைகள் மற்றும் பிற தொடர்புடைய அம்சங்களைப் பற்றி கேட்டறிந்தார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி