யாருக்கு ஆதரவு - முடிவை அறிவித்தார் வாசுதேவ
அடுத்த அதிபரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு
சிறிலங்காவில் அடுத்த அதிபரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது. இதில் பொதுஜன பெரமுனவிற்குள் யாருக்கு ஆதரவு என்பதில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த அதிபரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கே தனது ஆதரவு என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு
பொதுமக்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். டலஸ் அழகப்பெருமவின் தலைமையில் சர்வகட்சி அரசாங்கம் உருவானால் தற்போதைய நெருக்கடியை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும, சஜித் பிரேமதாச மற்றும் அநுர குமார திஸநாயக்க என நான்கு பேர் களத்தில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.