கொரோனாவிலிருந்து மீண்டு வந்தார் வாசுதேவ நாணயக்கார
srilanka
corona virus
vasudeva nanayakkara
By Vasanth
கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து வாசுதேவ நாணயக்கார மீண்டுள்ளதாக அவரின் ஊடக செயலாளர் தெரிவிக்கிறார்.
இவருக்கு ஜனவரி 11 ஆம் திகதி கோவிட் -19 தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் ஒரு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும், அவர் நோயிலிருந்து முழுமையாக மீண்டு இப்போது மருத்துவ சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்று அவரது ஊடக செயலாளர் தெரிவித்தார்.
வைரஸ் இருப்பது கண்டறியப்பட்ட 5 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, ரவுஃப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த, அமைச்சர் நாணயக்கார, மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இதேவேளை அண்மையில் தயாசிறி ஜெயகேரவும் கொரோனாவிலிருந்து மீண்டமை குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி