வரி அதிகரிப்பு குறித்து சஜித் வெளியிட்ட கருத்து
Sajith Premadasa
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Sathangani
இலங்கையில் பெறுமதிசேர் வரியை 18 சதவீதமாக அதிகரிப்பது வரி சூத்திரத்தை குழப்பியடிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழுவுடன் நேற்று (31) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த வரி அதிகரிப்பினால் இந்நாட்டின் சாதாரண வறிய மக்களும், உழைக்கும் மக்களும் பெரும் வரிச்சுமைக்கு ஆளாவார்கள் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
220 இலட்சம் பேர் மீது வரிச்சுமை
வினைத்திறன் இன்மை மற்றும் மோசமான அரச நிர்வாகச் செயற்பாடுகள் அரசாங்கத்தின் பலவீனத்தை எடுத்துக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எந்த மக்கள் ஆணையும் இல்லாமல் 220 இலட்சம் பேர் மீது வரிச்சுமையை சுமத்துவது சரியா என்றும் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்