ட்ரம்பின் முயற்சிக்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை! வத்திக்கானின் அதிரடி அறிவிப்பு

Donald Trump United States of America Vatican World
By Dilakshan Feb 18, 2026 08:51 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள அமைதி திட்ட அமைப்பில் இணையப்போவதில்லை என்று வத்திக்கான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உலகளாவிய நெருக்கடிகள் தொடர்பான நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை வத்திக்கான் வலியுறுத்தியுள்ளது.

அந்தக் காரணத்தினாலேயே இந்தத் திட்டத்தில் பங்கேற்காதிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வர காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வர காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு


காசா மறுசீரமைப்பு

காசா பகுதியில் போர் நிறுத்த நிலையை கண்காணித்து, மறுசீரமைப்பு பணிகளை ஒருங்கிணைப்பதற்காக ‘அமைதி திட்ட’ அமைப்பை உருவாக்கியதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

ட்ரம்பின் முயற்சிக்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை! வத்திக்கானின் அதிரடி அறிவிப்பு | Vatican Denies Joining Us Peace Board Plan

Image Credit: PBS

இந்த முயற்சியில் பங்கேற்குமாறு அமெரிக்காவில் பிறந்த முதல்பாப்பரசரான 14 ஆம் லியோவுக்கு கடந்த ஜனவரி மாதம் அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த அமைப்பின் தொடக்கக் கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை வொஷிங்டனில் நடைபெறவுள்ளது. காசா மறுசீரமைப்பிற்காக சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி திரட்டுவது குறித்தும் அக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

வத்திக்கான் மறுப்பு

வத்திக்கான் வெளிவிவகார செயலாளர் கர்தினால் பியட்ரோ பரோலின் வெளியிட்ட அறிக்கையில், “வத்திக்கான் பிற நாடுகளைப் போன்ற ஒரு சாதாரண அரசு அல்ல; அதன் தனித்துவம் வேறுபட்டது.

ட்ரம்பின் முயற்சிக்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை! வத்திக்கானின் அதிரடி அறிவிப்பு | Vatican Denies Joining Us Peace Board Plan

Image Credit: ExcursionMania

சர்வதேச நெருக்கடிகளை ஐக்கிய நாடுகள் சபையே முன்னின்று கையாள வேண்டும் என்பதில் எங்கள் நிலைப்பாடு தெளிவானது. எனவே இந்த அமைப்பில் பங்கேற்க முடியாது,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ட்ரம்பின் இந்த முயற்சி ஐக்கிய நாடுகள் சபையின் பங்கையும் அதிகாரத்தையும் பாதிக்கக்கூடும் என்ற கவலை சில நாடுகளால் வெளியிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க கடல் ஆதிக்கத்திற்கு புதிய சவாலான சீன நீர்மூழ்கிக் கப்பல்கள்

அமெரிக்க கடல் ஆதிக்கத்திற்கு புதிய சவாலான சீன நீர்மூழ்கிக் கப்பல்கள்

சர்வதேச நாடுகளால் உற்றுநோக்கப்படும் அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை!

சர்வதேச நாடுகளால் உற்றுநோக்கப்படும் அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை!

 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015