மரண ஓலத்தை ஏற்படுத்திய “வட்டுவாகல் பாலத்தில்” தீப்பந்தங்களை ஏந்தியவாறு பேரணி.. (காணொளி)
சிறிலங்காவின் சுதந்திர தினமான இன்று தமிழ் தேசத்தின் கரிநாள் எனும் தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இருந்து ஆரம்பமான மாபெரும் போராட்டம் செல்வபுரத்தில் நிறைவு பெற்றுள்ளது.
குறித்த பேரணிப் போராட்டாமானது வட்டுவாகல் பாலத்தை வந்தடைந்த போது, போராட்டாக்காரர்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு தமது குமுறல்களை வெளிப்படுத்தி போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
“சர்வதேச விசாரணை வேண்டும்” - “ எமது கடல் எமக்கு வேண்டும்” - “ வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்” - “ எங்கே எங்கே உறவுகள் எங்கே” - “குடும்பம் குடும்பமாக கையளிக்கப்பட்ட உறவுகள் எங்கே” - “வைத்தியசாலைகளில் இருந்து காணாமால் போன உறவுகள் எங்கே” - முள்ளிவாய்காலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட உறவுகள் எங்கே” - “விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட உறவுகள் எங்கே” - “குழந்தைகளோடு ஒப்படடைக்கப்பட்ட உறவுகள் எங்கே” - “இன அழிப்பும் கொடூர யுத்தமும் முடிந்த பிற்பாடு கையளிக்கப்பட்ட உறவுகள் எங்கே” - போன்ற கோசங்களை எழுப்பியவாறு பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
இன்றைய தினம் வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்களுக்கு சுதந்திர தினம் அல்ல கரிநாள் என்ற தொனியில் பல இடங்களிலும் பேரணிப் போராட்டம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை அறிய கீழுள்ள லிங்கினை அழுத்தவும்,
சிறிலங்காவின் சுதந்திர நாள் “தமிழ்த்தேசத்தின் கரிநாள்” ஆரம்பமானது மாபெரும் போராட்டம்! (காணொளி)
முள்ளிவாய்க்காலில் ஆரம்பிக்கப்பட்ட மாபெரும் பேரணி செல்வபுரத்தில்!
“சிறிலங்காவிற்கு சுதந்திர நாள் - தமிழர்களுக்கு கரிநாள்” யாழில் பாரிய போராட்டம்
சுதந்திர தினத்தில் யாழ் பல்கலை பிரதான வாயிலில் கட்டப்பட்ட கருப்புத் துணி!
