வவுனியாவில் கோர விபத்து! ஒருவர் பலி மற்றுமொருவர் படுகாயம்
வவுனியா பல்கலைக்கழக விடுதிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், பிறிதொருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக பூவரசங்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பாக தெரியவருவதாவது, வீதியோரத்தில் அமர்ந்து சோளம் விற்பனை செய்து கொண்டிருந்த நபரிடம், பிறிதொருவர் சோளம் வாங்கிக் கொண்டிருந்த வேளையில் மன்னாரில் இருந்து வந்த டிப்பர் வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியுள்ளது.
மேலதிக விசாரணை
இவ்விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி சோளம் வாங்கிய நபர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் சாளம்பைக்குளம் பகுதியை சேர்ந்த ரகீம் மஜீத் ( வயது 31) என்பவரே பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பூவரசங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |