பேருந்து ஏற முற்பட்டவருக்கு ஏற்பட்ட அவலம்! சாரதி கைது
Tamils
Vavuniya
Death
By Shadhu Shanker
வவுனியா பூவரசங்குளத்தில் பேருந்தில் ஏற முற்பட்டவரை பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது, பூவரசங்குளம் சந்தியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் இன்று(18) காலை இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியாவிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்து பூவரசங்குளம் தரிப்பிடத்தில் தரித்து நின்ற போது அதில் ஏற முற்பட்ட ஒருவர் பேருந்தில் சிக்குண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பேருந்தில் சிக்குண்டு பலி
இவ் விபத்தில் பூவரசங்குளம் மணியர்குளம் பகுதியினை சேர்ந்த 76 வயதுடயை முதியவரே உயிரிழந்தவராவார்.
சம்பவ இடத்திற்கு சென்ற பூவரசங்குளம் காவல்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன் பேருந்தின் சாரதியினையும் கைது செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 17 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்