கனடாவில் கொல்லப்பட்ட இலங்கை குடும்பத்தாரின் இறுதிச் சடங்குகள் நிறைவு

Sri Lanka Justin Trudeau Canada Ottawa Death
By Shadhu Shanker Mar 18, 2024 08:30 AM GMT
Report

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் வசிக்கும் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேருக்கும் நேற்றைய தினம்(17)இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பல மதத்தினரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்கள்.

ரஷ்யாவுக்கு பேரதிர்ச்சி: உக்ரைனில் களமிறங்கப்போகும் நட்பு நாடுகள்

ரஷ்யாவுக்கு பேரதிர்ச்சி: உக்ரைனில் களமிறங்கப்போகும் நட்பு நாடுகள்

மோசமான கொலை

ஒட்டாவா நகர வரலாற்றிலேயே மிகவும் மோசமான கொலையாக பார்க்கப்படும் 35 வயதான தர்ஷனி (Darshani Ekanayake), இவரது நான்கு பிள்ளைகள் மற்றும் குடும்ப நண்பர் ஒருவரும் மார்ச் 6ம் திகதி படுகொலை செய்யப்பட்டனர்.

கனடாவில் கொல்லப்பட்ட இலங்கை குடும்பத்தாரின் இறுதிச் சடங்குகள் நிறைவு | Canada Ottawa Crime Funeral For Sri Lankan Family

முகம் மற்றும் கைகளில் காயங்களுடன் உயிர் தப்பிய தனுஷ்க விக்கிரமசிங்க (தர்ஷனியின் கணவர்) மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு குணமடைந்து வருகிறார்.

இறுதிச்சடங்கு நிகழ்வின் போது விக்கிரமசிங்க கண்ணீர் விட்டு அழுத நிலையிலேயே காணப்பட்டார். குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர்.

வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை: இன்றைய தங்க விற்பனை நிலவரம்

வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை: இன்றைய தங்க விற்பனை நிலவரம்

கனடாவில் இறுதிச்சடங்கு

இறுதிச்சடங்கு நிகழ்வின் போது பேசிய புத்த துறவி  அஜான் விரதம்மோ (Ajahn Viradhammo), விரக்தி அல்லது கோபத்தில் சமநிலை இழப்பதற்குப் பதிலாக ஒருவரையொருவர் ஆதரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கனடாவில் கொல்லப்பட்ட இலங்கை குடும்பத்தாரின் இறுதிச் சடங்குகள் நிறைவு | Canada Ottawa Crime Funeral For Sri Lankan Family

மேலும், இது போன்ற இருளடைந்த தருணங்களில், இதயத்தின் ஆழத்தில் இருக்கும் இரக்கம் மற்றும் ஞானத்திலிருந்து நாம் வலிமையைப் பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்ட அறையில் 5 சவப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்றில் தர்ஷனி மற்றும் அவரது இரண்டு மாத பிஞ்சு குழந்தையின் புகைப்படங்கள் காணப்பட்டன.

இரங்கல் அறிக்கை

இறுதிச்சடங்கு நிகழ்வில் பௌத்த மத சடங்குகளும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த போதகர்களின் ஆராதனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

கனடாவில் கொல்லப்பட்ட இலங்கை குடும்பத்தாரின் இறுதிச் சடங்குகள் நிறைவு | Canada Ottawa Crime Funeral For Sri Lankan Family

அத்துடன் பிரதமர் ஜஸ்டின் டுரூடோ சார்பில், இரங்கல் அறிக்கை ஒன்றும் வாசிக்கப்பட்டது.

படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய 19 வயது பெப்ரியோ டி-சொய்சா(Febrio De-Zoysa) என்ற இலங்கை இளைஞரை  காவல்துறையினர் சம்பவத்தன்றே கைது செய்திருந்தனர். அவர் மீது ஆறு முதல் நிலை கொலை மற்றும் ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026