தமிழர் பகுதியில் நிகழ்ந்த சோகம்: உழவு இயந்திரத்தில் மோதுண்டு குழந்தை பலி
Vavuniya
Sri Lanka
Hospitals in Sri Lanka
By Dhilak
வவுனியா - நெடுங்கேணி பகுதியில் உழவு இயந்திரத்தில் மோதுண்டு மூன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று(05) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உழவு இயந்திரத்தை குழந்தையின் தந்தை இயக்கி கொண்டிருந்த வேளை, குழந்தை பின்னால் இருந்ததாகவும் அதன்போது உழவு இயந்திரத்தின் கலப்பை மற்றும் சுவருக்கு நடுவில் சிக்கி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் ..! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்