வவுனியாவில் 299 பேருக்கு கொவிட் தொற்று உறுதி! நால்வர் மரணம்
வவுனியாவில் மேலும் 299 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று (31) இரவு வெளியாகின.
அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கொவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 299பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் தாண்டிக்குளம், நெடுங்குளம், கோவில்குளம், குடியிருப்பு, ஆகிய பகுதிகளை சேர்ந்த நால்வர் கொரோனா தொற்றால் சாவடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தொற்றாளர்களை கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 1 மணி நேரம் முன்