வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு
covid
patient
vavuniya--death
By Vanan
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வயதான பெண் ஒருவர் கொவிட் தொற்று நோயால் இன்று சாவடைந்துள்ளார்.
குறித்த நபர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்றையதினம் சாவடைந்துள்ளார்.
அனுராரபுரம் - பூனாவை பகுதியைச் சேர்ந்த 52 வயதான பெண்ணே சாவடைந்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்