வவுனியாவில் உயிரிழந்த சிறுவன் தொடர்பில் வெளியான மருத்துவ அறிக்கை!
vavuniya
death
child
sri Lanka
PCR test
By Kalaimathy
வவுனியா பம்பைமடு பகுதியில் கொட்டகை ஒன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்த சிறுவனின் சடலம் பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்று முன்தினம் மாலை குறித்த சிறுவன் தனது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் கொட்டகையின் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். எனினும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். சம்பவத்தில் பம்மைமடு பகுதியை சேர்ந்த சுஜந்தன் கீர்த்திகன் என்ற ஒன்றரை வயது சிறுவனே மரணமடைந்துள்ளார்.