கிணற்றில் நீராடச்சென்ற சிறுவன் மாயம்!! தேடும் பணிகள் தீவிரம் (Photos)
வவுனியா கொக்குவெளிப்பகுதியில் கிணற்றில் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் மாயமாகியுள்ளதுடன், அவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த பகுதியில் அமைந்துள்ள பாரிய தோட்டக் கிணற்றில், மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவர் இன்று நீராடுவதற்காக குதித்துள்ளார்.
இதனை அவதானித்த அவரது நண்பர்கள் கிணற்றுக்குள் சென்று பார்த்தபோது, அவரைக் காணவில்லை.
இதனையடுத்து ஊர் மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், சம்பவ இடத்திற்குச் சென்ற கிராமத்தவர்கள் கிணற்றினுள் இறங்கி தேடுதல் நடாத்திய நிலையில் நீண்டநேரமாகியும் குறித்த சிறுவனை மீட்கமுடியவில்லை.
இதனையடுத்து கடற்படையினரின் உதவி கோரப்பட்டு தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் அகிலேஸ்வரன் தனுசன் என்ற 16 வயது சிறுவனே காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


