வவுனியாவில் விவசாயிகளுக்கு டீசல் விநியோகம் ஆரம்பம்! (படங்கள்)
வவுனியாவில் சிறுபோக நெல் அறுவடைக்கான டீசல் விநியோகம் கட்டம் கட்டமாக வழங்கும் செயற்பாடு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக இடம்பெற்றுவருகின்றது.
வவுனியா மாவட்டத்தில் 12 ஆயிரத்து 238 ஏக்கர் நிலப்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சிறுபோக நெற் செய்கையானது யூலை மாதத்தில் இருந்து ஓகஸ்ட் மாதம் வரையுள்ள காலப்பகுதியில் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது வரையுள்ள காலப்பகுதியில் 6040 ஏக்கரிற்குரிய 61156.25 லீற்றர் டீசலினை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 08 கமநல சேவை நிலையங்களின் ஊடாக விவசாயிகளிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடு மாவட்ட அரசாங்க அதிபர் சரத்சந்திரவின் வழிகாட்டலின் பேரில் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் நே.விஸ்னுதாஸனின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மீதமுள்ள விவசாய நிலங்களுக்கான டீசல் விநியோகம்
மேலும் மீதமாக உள்ள 6198 ஏக்கரிற்குரிய டீசலினை விரைவாக பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்