ஆலய திருவிழாவில் பங்கேற்ற குருக்கள் உட்பட பலருக்கு கொரோனா தொற்று
corona
vavuniya
kovil
By Jaso
வவுனியா ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற ஆலயதிருவிழாவில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து பலர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
குறித்த ஆலயத்தில் திருவிழா இடம்பெற்றுவருவதுடன் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளதாக சுகாதார தரப்பினருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த ஆலயத்திற்கு நேற்றையதினம் சென்ற சுகாதார பிரிவினர் அங்கு நின்றவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனையினை முன்னெடுத்தனர். இதன்போது ஆலயத்தின் குருக்கள் உட்பட6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து குறித்த நபர்களுடன் தொடர்புகளை பேணியவர்களுக்கு இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. தொற்று உறுதியானவர்கள் அவர்களது குடும்பங்களுடன் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

