வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்...! வெடித்த ஆர்ப்பாட்டம் - வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

Sri Lankan Tamils Tamils Vavuniya Protest
By Shalini Balachandran Jun 29, 2026 10:46 AM GMT
Report
Courtesy: Gokul

வவுனியா மாநகரசபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுனருக்கு ஏதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கம் முன்னால் இன்று (29-06-2026) குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

அங்கிருந்து மன்னார் வீதி வழியாக ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் காமினி மகாவித்தியாலயம் முன்பாக நின்று கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகளால் சர்ச்சை!

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகளால் சர்ச்சை!

விசேட வர்த்தமானி

வடக்கு மாகாண ஆளுனரால் கடந்த 24 ஆம் திகதி வெளியிட்டப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபனின் பதவி பறிக்கப்பட்டதுடன் அவரது மாநகர சபை உறுப்புரிமையும் பறிக்கப்பட்டிருந்தது.

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்...! வெடித்த ஆர்ப்பாட்டம் - வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு | Vavuniya Municipal Council Mayor Dismissed Protest

இதனை கண்டித்து இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் ஆர்பாட்டக்காரர்கள் “ஆளுனரே ஜனநாயக படுகொலையை நிறுத்து, ஜேவிபியின் முகவராக ஆளுனரே செயற்படாதே, காவல் நிலையத்திற்கு முன்பாக உள்ள காட்சிக்கு மாநகரசபையிடம் காணி உரிமம் உண்டா ?, மக்கள் ஆணைக்கு மதிப்பளி, தையிட்டியில் பாராமுகம் மாநகர சபையில் பழிவாங்களா மற்றும் ஊழல் அறிக்கையை வெளிபடுத்து'” என பல்வேறு கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன், ப.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோதரராதலிங்கம், முத்து முகமது, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான செ.மயூரன், சிவநேசன், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகளால் சர்ச்சை!

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகளால் சர்ச்சை!

வர்த்தக நிலையங்கள்

அத்தோடு, வவுனியா மாநகரசபை மேயரின் பதவி நீக்கத்தை கண்டித்தும் வடக்கு ஆளுனருக்கு எதிராகவும் வவுனியா நகரப் பகுதியில் சில வர்ததக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

வடக்கு ஆளுனரின் ஜனநாயக படுகொலையை கண்டித்து வர்த்தக நிலையங்களை மதியம் வரை மூடுமாரு ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்து கோரிக்கை விடப்பட்டிருந்தது.

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்...! வெடித்த ஆர்ப்பாட்டம் - வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு | Vavuniya Municipal Council Mayor Dismissed Protest

குறித்த கோரிக்கைக்கு அமைய வடக்கு ஆளுனரின் செயற்பாட்டை கண்டித்து வவுனியா நகரப் பகுதியில் இருந்த வர்த்தக நிலையங்களில் 50 வீதமான வர்த்தக நிலையங்பள் சுமார் மூன்று மணிநேரம் மூடி தமது எதிர்ப்பை வெளிபடுத்தி இருந்தனர்.

ஏனைய வர்த்தக நிலையங்கள் வழமை போல் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

🛑செய்திகள் - Gokul 

உதவியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சாகர

உதவியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சாகர

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019