வவுனியா வடக்கு பிரதேசசபை : ஆளும் கட்சி உறுப்பினர்களே தவிசாளருக்கு எதிராக போர்க்கொடி
மக்கள் பிரச்சனையை கதைக்க அனுமதிகாமையால் வவுனியா வடக்கு தவிசாளருககு எதிராக உப தவிசாளா உள்ளிட்ட 7 ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
வவுனியா வடக்கு பிரசே சபையின் மாதாந்த அமர்வு சபா மண்டபத்தில் தவிசாள் தி.கிருஸ்ணவேணி தலைமையில் இன்று (18.09) இடம்பெற்றது.
தவிசாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆளும் கட்சி கட்சி உறுப்பின்கள்
இதன்போது சபை அமர்வு நிகழ்சி நிரலில் ஏனைய விடயங்கள் என்ற விடயம் உள்ளடக்கப்படவில்லை. ஏனைய விடயங்கள் நிகழ்ச்சி நிரலில் தேவை எனவும் அதன் மூலமே மக்கள் பிரச்சனையை தீர்க்க முடியும் எனத் தெரிவித்து ஆளும் கட்சி கட்சி உறுப்பின்கள் சிலர் தவிசாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு தவிசாளர் தி.கிருஸ்ணவேணி அவ்வாறு அனுமதி வழங்க முடியாது. 7 நாட்களுக்கு முன் சமர்ப்பித்த விடயங்களை மட்டுமே பேச முடியும் என தெரிவித்தார். இதனால் தவிசாளருக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
7 பேர் வெளிநடப்பு
இதனையடுத்து உப தவிசாளர், தி.சஞ்சுதன் உட்பட ஆளும் கட்சியைச் சேர்ந்த தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 7 பேர் வெளிநடப்பு செய்தனர்.
ஆளும் தரப்பை சேர்ந்த தமிழரக் கட்சியின் 5 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய பெரும்பான்மையின உறுப்பினர்களுடன் இணைந்து தவிசாளர் தொடர்ந்தும் சபையை கொண்டு நடத்தினார்.
23 உறுப்பினர்களைக் கொண்ட வவுனியா வடக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி 5, தமிழ் தேசிய மக்கள் முன்னனி 4, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு 3 என்பன இணைந்து ஆட்சி அமைத்துள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் 2 உறுப்பினர்களும், சர்வஜன அதிகாரத்தின் 1 உறுப்பினரும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயற்படுவதுடன் தேசிய மக்கள் சக்தியின் 6 உறுப்பினர்களும், இலங்கை தொழிலாளர் கட்சியின் 2 உறுப்பினர்களும் எதிர்கட்சியாக செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 7 பேர் வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்தரப்பின் ஆதரவுடன் தொடர்ந்தும் அமர்வு இடம்பெற்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
