புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் அதிகரித்த மக்கள் கூட்டம்- தொற்று அதிகமாகும் அபாயம்!
நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ் நிலையிலும் நாளைய தினம் புத்தாண்டை முன்னிட்டு வவுனியா நகரில் அதிக சன நெரிசல் காணப்படுகின்றது.
இதனால் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் வீதி விபத்துக்கள் ஏற்படுகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான அசாதாரண நிலையிலேயே நாளைய தினம் தமிழ் சிங்கள புத்தாண்டினை கொண்டாடுவதற்காக புத்தாடைகள், பட்டாசுகள் , மரக்கறிகள் என பொருட்களை கொள்வனவு செய்ய வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர்.
இருந்தும் பல இடங்களில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்ய வருபவர்கள் முகக்கவசத்தினை அணிந்து வந்தாலும். சரியான சமூக இடைவெளியை பின்பற்றாததனை அவதானிக்க முடிகின்றது. இதனால் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் அபாயமும் வவுனியா நகரில் ஏற்பட்டுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு வவுனியா நகரிற்கு அதிக மக்கள் வருகை தந்ததனால் சன நெரிசல் அதிகமாகி நடைபாதை வியாபாரங்களாலும் விபத்துக்கள் ஏற்படும் சாத்தியமும் அதிகமாக காணப்படுகின்றது. இருப்பினும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.








