வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இடம்பெறும் சமூக சீர்கேடுகள்:நகரசபையின் அலட்சியம்
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பாவனையற்ற கட்டடத்தில் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாக அப்பகுதி வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பழைய பேருந்து நிலையம் செயற்பட்ட காலத்தில் பயணிகள் காத்திருப்பதற்காக அமைக்கப்பட்ட கட்டடங்கள் பின்னர் உள்ளூர் உற்பத்தி விற்பனை நிலையமாக செயற்பட்டது.
இதன்போது குறித்த கட்டடங்கள் மூடி மறைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பகுதியில் விற்பனை நிலையம் கைவிடப்பட்ட போதிலும் அவை அகற்றப்படாமல் இருந்தது.
சமூக சீர்கேடுகள்
இந் நிலையிலேயே குறித்த கட்டிடத்தின இரவு நேரங்களில் சிலர் தங்கியிருப்பதுடன் சமூக சீர்கேடுகளும் இடம்பெற்று வருகின்றது.
நகரசபைக்கு சொந்தமான குறித்த பகுதி தொடர்பில் நகரசபைக்கு அறிவித்த போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வவுனியா நகரசபையின் பதில் செயலாளருடன் தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அது பயனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |