வவுனியாவில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்
Missing Persons
Sri Lankan Tamils
Vavuniya
Mullivaikal Remembrance Day
SL Protest
By Sathangani
வவுனியாவில் (Vavuniya) முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்றையதினம் (18) தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் போராட்ட இல்லத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது.
கொடிகளை ஏந்தியவாறு
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி 2645 ஆவது நாளாக போராடி வரும் உறவுகள், இனப்படுகொலைக்கு நீதி கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கண்ணீர்மல்க தமது ஆதங்கங்களையும் வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி