முடிவுக்கு வந்தது! இ.போ.ச ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு
இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) வவுனியா (Vavuniya) சாலையின் பொறியியல் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஸ்கரிப்பு பேச்சுவார்த்தையினை அடுத்து கைவிடப்பட்டுள்ளது.
குறித்த சாலையின் பொறியியல் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரண்டு மாதங்களாக மேலதிக நேரக்கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என தெரிவித்து இன்று (09) காலை முதல் பணிப்பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதனால் வவுனியா சாலையின் பேருந்துகள் இன்று காலை முதல் போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்
இந்த நிலையில் சாலைக்கு சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.
அத்துடன் அவர்களுக்கான மேலதிக நேரக்கொடுப்பனவை விரைவாக வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதையடுத்து குறித்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக எதிர்வரும் வாரம் போக்குவரத்துசபையின் உயர் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |