வவுனியா பல்கலைக்கழகத்தில் வியாபார ஒத்துழைப்பு மையம் உருவாக்கம்
வவுனியா பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து வியாபாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற நிறுவனம்(incubation center) விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தொழில் முனைவோருக்கு ஒத்துழைப்பை வழங்குவதை நோக்கமாக கொண்டு “வியாபாரத்திற்கு ஒத்துழைப்புவழங்குகின்ற நிறுவனங்களை”(incubation center) பல்கலைக்கழகங்களை மையமாக வைத்து ஆரம்பிப்பிக்கும் நோக்கோடு வவுனியா பல்கலைக்கழகத்தில் குறித்த ஆய்வு நிறுவனம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வடமாகாணத்தில் முதன் முதலாக தரச்சான்றிதழ் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுக்கு கைத்தொழில் அமைச்சர் சுனில் கெந்துன்நெத்தி, விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் கிரிசாந்த அபெயசேன, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஜெகதீஸ்வரன், எஸ். திலகநாதன், பல்கலைக்கழக வேந்தர் , துணைவேந்தர் அ. அற்புதராஜா உட்பட அமைச்சின அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.





| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |