வெடுக்குநாறிமலை அராஜகம்: மட்டக்களப்பில் வெடிக்கவுள்ள போராட்டம்
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி நாளில் மதவழிப்பாட்டுரிமை மறுக்கப்பட்டமைக்கு எதிராக அகிம்சை வழி போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த போராட்டமானது, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நாளை(10) காலை 9.30 மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில், போராட்டத்தில் கலந்துக் கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை அராஜகம்
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் நேற்றைய தினம் இரவு 6 மணிக்கு பின்னர் பக்தர்கள் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள காவல்துறையினர் தடை விதித்திருந்தனர்.
காவல்துறையினரின் தடைகளை மீறி வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பூஜை வழிபாடுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டதுடன், பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கலகம் அடக்கும் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆலயத்தில் குவிக்கப்பட்டதுடன், பாதணிகளுடன் ஆலயத்திற்குள் புகுந்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
அத்தோடு, ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட வழிபாடுகளில் கலந்து கொண்ட 7பேர் கைது செய்யப்பட்டதுடன் பூஜை வழிபாடுகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதும் காவல் துறையினர் தாக்குதல் மேற்கொண்டனர்.
அதன்படி, மட்டக்களப்பில் வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற அடாவடிகளுக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.