காவல்துறையினரின் அடாவடித்தனம்! பதற்றத்தில் வெடித்தது போராட்டம்: குவிக்கபட்ட காவல்துறையினர்
போராட்டம் ஆரம்பம் (புதிய இணைப்பு)
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரும் போராட்டமானது வுனியா - பழைய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக தற்போது ஆரம்பமாகியுள்ளது.
தற்போது இந்த போராட்ட பேரணியானது வுனியா - பழைய பேருந்து தரிப்பிடத்திலிருந்து தொல்பொருள் திணைக்களம் வரை நகரவுள்ளது.
இதன்படி போராட்டக்களத்தில் காவல்துறையினரும், அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போராட்ட களத்தில் திடீரென குவிக்கப்பட்ட படையினர்! பதற்றத்தில் மக்கள்
வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 8 பேரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக இன்று(16) எழுச்சி போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் போராட்டம் இடம்பெறவுள்ள வவுனியா பழைய பஸ் தரிப்பு நிலைய பகுதியில் பெருமளவான காவல்துறையினர் மற்றும் கலகமடக்கும் படையினர் தற்போது குவிக்கப்பட்டுள்ளனர்.
அச்சத்தில் மக்கள்
இதனால் மக்கள் அச்ச நிலையுடன் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, வவுனியாவில் இடம்பெறவுள்ள எழுச்சிப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ் நல்லூர் ஆலய முன்றலில் இருந்து இன்று(16) காலை வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா
