வெடுக்குநாறி ஆலய பூசாரி, நிர்வாக உறுப்பினரின் கைதைக் கண்டித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
Vavuniya
University of Jaffna
SL Protest
By Vanan
வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வர் ஆலயத்தின் பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினரின் கைதைக் கண்டித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் பங்கேற்பு
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் - தமிழர்களின் தொன்மையை அழிக்காதே, வெடுக்குநாறி எங்கள் சொத்து, தொல்லியல் திணைக்களம் அரசின் கைக்கூலி, போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களும் கலந்துகொண்டனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி