நெடுங்கேணி காவல் நிலைய பொறுப்பதிகாரி மனநோய்க்கு உட்பட்டவரா! கஜேந்திரன் எம்.பி கேள்வி

Sri Lanka Police Vavuniya Sri Lanka Police Investigation Selvarajah Kajendren
By Shadhu Shanker Mar 15, 2024 01:04 PM GMT
Report

வவுனியா நெடுங்கேணி காவல் நிலைய பொறுப்பதிகாரி  மனநோய்க்கு உட்பட்டவரா என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுவிக்க வலியுறுத்தியும், காவல்துறையினரின் அராஜகத்தை கண்டித்தும் வவுனியா, நெடுங்கேணியில் இன்று (15.03) இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கைது செய்யப்பட்டவர்களின் ஒருவரின் வேட்டியை உருவி அரை நிர்வாணமாக கொண்டு வந்திருந்தார்கள். நெடுங்கேணி காவல் நிலைய பொறுப்பதிகாரி வக்கிர புத்தி கொண்டவர். ஏனெனில் ஆண் ஒருவரை அரை நிர்வாணமாக கொண்டு வருகின்ற போது காவல் நிலையத்தில் பெண் காவல்துறையினர் உள்ளார்கள்.

"வெடுக்குநாறிமலை தமிழர்களுடைய சொத்து" காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பாரிய போராட்டம்

"வெடுக்குநாறிமலை தமிழர்களுடைய சொத்து" காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பாரிய போராட்டம்

கஜேந்திரன் கேள்வி

பொதுமக்கள், பெண்கள் வெளியில் நிற்கிறார்கள். அப்படி இருக்கையில் அவர்களுக்கு முன்னே அரை நிர்வாணமாக கொண்டு செல்ல நெடுங்கேணி காவல் நிலைய பொறுப்பதிகாரி அனுமதிக்கின்றார் என்றால் அவரிடம் ஒரு மனநோய் இருக்க வேண்டும்.

நெடுங்கேணி காவல் நிலைய பொறுப்பதிகாரி மனநோய்க்கு உட்பட்டவரா! கஜேந்திரன் எம்.பி கேள்வி | Vedukunari Hill Problem Gajendran Mp Police Tamils

அப்படிப்பட்ட இனவெறி, மதவெறி, பாலியல் சார்ந்த மனநோய்க்கு உட்பட்டவரா என்ற கேள்வி எழுகின்றது. மிருக குணம் கொண்ட ஒருவரால் கைது செய்யப்ப்ட்ட 8 பேரும் மறுநாள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் தான் குற்றச்சாட்டுக்களை தேடிப் பிடித்தார்கள். தொல்பொருள் சின்னம் எவற்றுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

பொய்யான அடிப்படையில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளரிடம் அறிக்கை பெற்று அவர்களைது பிணையை நிறுத்தியுள்ளார்கள். வெடுக்குநாறி மலையை சைவர்களிடம் இருந்து பறித்து எடுப்பதற்கான முயற்சியே நடைபெறுகிறது.

வட்டுக்கோட்டை படுகொலை சம்பவம்: கடற்படையினர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

வட்டுக்கோட்டை படுகொலை சம்பவம்: கடற்படையினர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

தமிழ் - சிங்கள கலவரம்

தொல் பொருள் அமைச்சரும் இதன் சூத்திரதாரியாக இருந்து செயற்படுகின்றார். அவர் இனவெறிச் செயற்பாட்டை கடந்த காலங்களில் மேற்கொண்டவர். குருந்தூர் மலையில் அகழ்வு செய்யப் போகின்றோம் எனப் பொய் சொல்லி அங்கு பௌத்த விகாரையை நிறுவியவர்.

நெடுங்கேணி காவல் நிலைய பொறுப்பதிகாரி மனநோய்க்கு உட்பட்டவரா! கஜேந்திரன் எம்.பி கேள்வி | Vedukunari Hill Problem Gajendran Mp Police Tamils

அதற்கு முழு சூத்திரதாரி விதுர விக்கிரமநாயக்க என்ற தொல்பொருள் அமைச்சர். அதே அமைச்சர் தான் தற்போது இங்கே வன்முறைகளுக்கு காரணமாக இருக்கிறார்.

தமிழ் - சிங்கள கலவரத்தை ஏற்படுத்த முயல்கிறார். இந்த இனவெறிக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. 5 ஆவது நாளாக கைது செய்யப்பட்ட 8 பேரில் 5 பேர் உண்ணாவிரதம் இருகிறார்கள். அவர்களது உடல் நிலை பாதிப்படைகிறது. வவுனியாவில் உள்ள மனிதவுரிமை ஆணைக்குழு அதிகாரி இனவெறி பிடித்தவராக இருக்கிறார்.

விடுதலைக்காக குரல்

மனிதவுரிமை ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை கைதிகளை பார்வையிடவில்லை. குடும்பத்தினரை சந்திக்கவில்லை. அவர்களும் இந்த ஒடுக்குமுறைக்கு துணை போகிறார்கள்.

நெடுங்கேணி காவல் நிலைய பொறுப்பதிகாரி மனநோய்க்கு உட்பட்டவரா! கஜேந்திரன் எம்.பி கேள்வி | Vedukunari Hill Problem Gajendran Mp Police Tamils

வவுனியா மனிதவுரிமை ஆணைக்குழு அதிகாரி பதவி விலக வேண்டும். அதன் கொழும்பு அலுவலகம் பேரினவாத நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றதா? என்ற கேள்வியும் எழுகிறது.

நாளைய தினம் (16.03) காலை 10 மணிக்கு வவுனியா கந்தசாமி ஆலயத்தின் முன் நடைபெறும் போராட்டத்திலும் அனைவரும் கலந்து கொண்டு அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016