யாழில் 1000 ரூபாவை தாண்டிய தக்காளி, கரட் விலைகள்
By Independent Writer
யாழ்ப்பாணம் - வடமராட்சி மரக்கறி சந்தைகளிகளில் மரக்கறிகளின் விலை சடுதியாக உயர்ந்துள்ளது.
அந்த வகையில் ஒரு கிலோகிராம் தக்காளி மற்றும் கரட் என்பன 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கத்தரி 600 முதல் 800 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பச்சை மிளகாய் மட்டும் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்