இலங்கையில் மரக்கறிகளுக்கும் ஏற்படவுள்ள தட்டுப்பாடு
srilanka
vegetable
shortage
By Jaso
மரக்கறி தட்டுப்பாடு காரணமாக அடுத்த வாரத்திற்குள் மரக்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படக் கூடுமெனவும் விலை மேலும் உயரக்கூடும் எனவும் பேலியகொட மொத்த விற்பனை சந்தையின் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
மலையக மரக்கறி விவசாயிகள் சந்தைக்கு மரக்கறிகளை வழங்குவதற்கு அறுவடை இல்லையெனவும் இதனால் மரக்கறிகளை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பேலியகொட மொத்த விற்பனை சந்தை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பீன்ஸ், கரட், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் மொத்த விலை ரூ.200ஐ தாண்டியுள்ளது.
பீன்ஸ், கரட், கத்தரிக்காய் போன்ற ஒரு கிலோ காய்கறிகளின் சில்லறை விலை ரூ.500-ஐ நெருங்கியுள்ள நிலையில், தக்காளியின் சில்லறை விலை ரூ. 450.ஆகவும் காணப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.