யாழில் இடம்பெற்ற வாகன விபத்து - சம்பவ இடத்திலேயே பலியான இளைஞன்!
Jaffna
Accident
Death
By Vanan
யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்று (16) மதியம் 3.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் மாவைகலட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதான தா.தினேஷ் என்ற இளைஞரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மாவிட்டபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வாகன சாரதி கைது
சிறியரக வாகனமும் துவிச்சக்கர வண்டியும் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சடலம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக காங்கேசன்துறைப் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி