தேர்தல் பணிக்கு சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!
Trincomalee
Accident
Election
By pavan
தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான ஜீப் வண்டி விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த ஜீப் வண்டி விபத்த்துக்குள்ளானதையடுத்து படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சிகிச்சை பலனின்றி ஜீப் வண்டியின் சாரதி நேற்று காலை உயிரிழந்ததாக உப்புவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
பொலன்நறுவையை சேர்ந்த 29 வயதான சுமித் ஜயதிலக்க என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி