வாகனங்களில் இருந்து வெளிவிடப்படும் நச்சுபுகை: எடுக்கப்படவுள்ள அதிரடி சட்டநடவடிக்கை
வாகனங்களில் இருந்து வெளிவிடப்படும் நச்சுபுகை தொடர்பாக வழக்குத் தொடரவோ அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கவோ காவல்துறையினர் தவறிவிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நச்சுப்புகையை வெளியேற்றி வரும் நிலையில் குறித்த தகவலை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின்படி மோட்டார் பரிசோதகர்கள் மற்றும் காவல்துறையினருக்கு நச்சுப்புகையை வெளியேற்றும் மற்றும் வாகனங்களை சோதனை செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்தும் திறன் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நச்சு கறுப்புப்புகை
இருப்பினும் இது தொடர்பாக காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென மோட்டார் போக்குவரத்து துறையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் நச்சு கறுப்புப்புகையை வெளியிடும் அரச வாகனங்கள் உட்பட்ட வாகனங்களுக்கு 2000 - 5000 ரூபாவிற்கு குறையாமல் அபராதம் விதிக்க முடியும் என்ற போதிலும் காவல்துறையினர் இது தொடர்பாக கவனம் செலுத்த தவறியுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |