வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்குவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லையென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது.
எனினும் தனியார் வாகனங்கள் தவிர்ந்த அனைத்து வாகனங்களுக்குமான தடைகளும் தளர்த்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டொலர் கையிருப்பு
இந்த நிலையில், நாட்டில் ஏற்கனவே போதியளவு வாகனங்கள் காணப்படுவதாக துறைசார் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
ஆகவே எரிபொருள் மற்றும் டொலர் கையிருப்பு போன்ற காரணிகள் தொடர்பில் மதிப்பீடுகளை செய்து அதன் அடிப்படையில் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி தனியார் வாகனம் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி தடைகள் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.