வாகன இறக்குமதி அரசின் முடிவு வெளியானது
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்திடம் தற்போதைக்கு எந்த தயார்நிலையும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வாகன இறக்குமதி
மேலும், அரச வருவாயைப் பொறுத்தமட்டில், வாகன இறக்குமதி அரசுக்கு மிகவும் முக்கியமானது, ஆனால், அந்நிய கையிருப்பு அளவை எட்டிய பிறகே அதைச் செய்ய வேண்டுமா என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தற்போதுள்ள வாகனங்கள் போதுமானதா
இந்த நாட்டில் தற்போதுள்ள வாகனங்கள் போதுமானதா என்பதை ஆராய்ந்து அந்த அறிக்கையின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |