வாகனம் வைத்திருப்போருக்கு ஓர் அதிர்ச்சி தகவல்!
Government Of Sri Lanka
Electric Vehicle
Economy of Sri Lanka
By Dharu
ஐந்து வருடங்களாக வருமான அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
குறித்த வாகனங்களை திணைக்களத்தின் தகவல் அமைப்பிலிருந்து நீக்குவதற்கும் தீர்மானித்துள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் தற்போது 8.3 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், 6 மில்லியன் வாகனங்கள் மட்டுமே QR குறியீட்டு முறைமை மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி 05 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வருமானவரி அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்கள் மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகரின் உதவியுடன் தகவல் அமைப்பில் இருந்து நீக்கப்படும் என தெரிவித்தார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி