வாகன ரயர்களின் விலையில் மாற்றம்..!
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka
Dollars
By pavan
டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றத்தால் இறக்குமதி செய்யப்படும் ரயர்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எனினும் இறக்குமதி செய்யப்படும் ரயர்களின் விலையை 5 வீதத்தினாலேயே குறைக்க முடியும் என ரயர் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, கொள்வனவு செய்த ரயர்கள் சந்தையில் இருக்கின்றமையே இதற்கு காரணம் என அதன் தலைவர் சுனில் பொன்சேகா தெரிவித்தார்.
15 வீதத்தினால் குறைக்கப்படும்
எவ்வாறாயினும், புதிய கையிருப்புகளைப் பெற்ற பின்னர், அடுத்த மூன்று மாதங்களுக்குள் இறக்குமதி செய்யப்படும் ரயர்களின் விலை சுமார் 15 வீதத்தினால் குறைக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களாக அமரிக்க டொலரின் பெறுமதி நாளுக்கு நாள் குறைவடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்