வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்
2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தினை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (Vehicle Importers Association of Sri Lanka) தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இதற்கான நிதியை ஏற்கனவே ஒதுக்கியுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் (Indika Sampath) தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பரிந்துரை
அத்துடன் இது தொடர்பான பரிந்துரைகளையும் மத்திய வங்கி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையில் வாகன இறக்குமதிக்கான தடையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது.
அந்தவகையில், 2025 பெப்ரவரிக்குள் அனைத்து வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |