இந்தியாவின் முற்றுகை: நித்தகைக்குளத்தில் புலிகள் அமைத்திருந்த நிலக்கீழ் தளங்கள்
இந்தியாவின் பிரபல எழுத்தாளர் எம்.ஆர்.நாராயணசாமி 2003 இல் எழுதிய பிரபல்யமாண ஒரு புத்தகத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பான நிறைய விடயங்கள் வெளியாகியிருந்தன.
அந்த புத்தகத்தில் 22 ஆம் அத்தியாயத்தில் டீப் அன்டர்கிரவுண்ட்(deep under ground) என்ற தலைப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் நித்தகைக்குள தளம் பற்றி விபரிக்கப்பட்டிருந்தது.
புலிகள் அந்த தளத்தை A4 bass என்ற குறியீட்டு பெயரில் தான் அழைப்பார்கள், வடக்கு கிழக்கு மாகாணத்தின் எல்லையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நித்தகைக்குள பிரதேசத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாம் அது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைப்பற்றும் நோக்கத்தோடு இந்தியாவின் முப்படைகளும் மேற்கொண்ட நித்தகைக்குள முற்றுகைப் பற்றி பல விடயங்களை இதற்கு முன்னதாக விரிவாக பார்த்திருந்தோம்.
இந்திய படைகளின் அதியுயர் பலப் பிரயோகத்துடன் கூடிய நித்தகைக்குள முற்றுகைப் பற்றிய மற்றொரு பதிவையும் அந்த நித்தகைக்குளத் தளத்தில் இடம்பெற்ற தலைவர் பிரபாகரன் தொடர்புப்பட்ட இரண்டு சம்பவங்கள் பற்றியும் தான் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியிலும் நாம் பார்க்கவிருக்கின்றோம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்